இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

x

இலங்கையில், எரி பொருட்களின் விலையை அந்நாட்டு பெட்ரோலிய நிறுவனம் குறைத்துள்ளது.இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்து, 333 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 10 ரூபாய் குறைத்து, 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒட்டோ டீசல் விலை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்