கார்டை ஸ்வைப் செய்து பணம் தர மறுத்த பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய கும்பல்.. வயிற்றில் குத்தி ஓட்டம்-பரபரப்பு காட்சி

x
  • பொள்ளாச்சி அருகே, பெட்ரோல் பங்க் மேலாளரை மதுபாட்டிலால் தாக்கியது தொடர்பாக, மூவர் கைது செய்யப்பட்டனர்.
  • ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு வந்த மதன் என்பவர், ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து பணம் தருமாறு மேலாளர் நவீன் என்பவரிடம் கேட்டதாக தெரிகிறது.
  • இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மதன், தனது நண்பர்களை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • மேலும், மதுபாட்டிலால் நவீனின் வயிற்றில் குத்தி விட்டு, அனைவரும் தப்பிச் சென்றனர்.
  • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொள்ளாச்சி மேற்கு போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்