மினி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு..கருகி கிடக்கும் பேருந்து - இரண்டு பேர் கைது

x

திசையன்விளை அருகே தனியார் மினி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நவவலடியில், சில தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, திசையன்விளை மன்னராஜா கோயில் தெருவைச் சேர்ந்த சூர்யா மற்றும் அப்பு விளையைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், திவாகரன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்