அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - தூத்துக்குடியில் பரபரப்பு

x

அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - தூத்துக்குடியில் பரபரப்பு


தூத்துக்குடியில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது தம்பி ஆகியோரது வீடுகளில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் 3வது தெரு பகுதியை சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரது வீட்டின் முன்பு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியில் உள்ள ஆறுமுக நயினாரின் சகோதரர் ராமசாமி என்பவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்