"ஓ இப்போ இது தான் புது ட்ரிக்கா?" கதவில் பெட்ரோல்... கையில் மிளகாய் பொடி.. புது பிளானோடு இறங்கிய திருடன்

x

கடலூர் அருகே ஜன்னல், கதவில் பெட்ரோல் ஊற்றி கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு கொள்ளையன் ஒருவர் கைவரிசை காட்ட சென்றார். அப்போது வீட்டின் பின் பக்கம் வழியாக சென்ற அவர் ஜன்னல், கதவில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். பின்னர் உள்ளே இருந்தவர்களிடம் பணம், நகையை கொடுங்கள் என கேட்கவே, அவர்கள் அதற்கு மறுத்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி கையில் வைத்திருந்த மிளகாய் தூளை அங்கே கொட்டிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்