"பலமுறை அதிகாரிகளை சந்தித்து மன உளைச்சலே மிஞ்சியது" - பிரதமர் அலுவலகத்தில் மனு

x

"பலமுறை அதிகாரிகளை சந்தித்து மன உளைச்சலே மிஞ்சியது" - பிரதமர் அலுவலகத்தில் மனு


கடலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வேம்பரசி என்ற பெண், வீடு கட்டித்தர கோரி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். கடந்த 2015 இல், கணவரை இழந்த வேம்பரசி, தனது 8 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, இயற்கை சீற்றத்தால் வீட்டையும் இழந்த இவர், அரசின் திட்டத்தில் வீடு கட்டித்தர கோரி அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு கொடுத்துள்ளார். ஆனால், மன உளைச்சல் மட்டுமே மிஞ்சிய நிலையில், மகனுடன் டெல்லி புறப்பட்ட வேம்பரசி, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தனது வேதனையை மனுவாக அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்