கேரள ஆளுநருக்கு எதிராக மனு.. உயர்நீதிமன்றம் அளித்த பதில்

x

கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் கேரள ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடாதது, ஜனநாயகத்துக்கு விடப்படும் சவால் என கூறப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் எத்தனை நாட்களுக்குள் அல்லது மாதங்களுக்குள் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிடாததால், மனுவின் கோரிக்கை மீது நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்