களைகட்டிய காளைகள் விடும் விழாவை திடீரென நிறுத்திய 'பீட்டா'...

x

வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில், காளைகள் விடும் விழாவை, பீட்டா அமைப்பினர் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

பென்னாத்தூர் பேரூராட்சியில், பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. காலை 10 மணிக்கு அங்கு திடீரென ஆய்வு நடத்த வந்த விலங்குகள் நல வாரிய அமைப்பினர், அரசு விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி,

காளைகள் விடும் விழாவை நிறுத்துமாறு கூறினர். இதனால் சாலையில் திரண்ட பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவுக்கு வந்திருந்த காளையின் உரிமையாளர்கள், செலவு மற்றும் காளைகளுக்கென கொடுக்கப்பட்ட பணத்தை திரும்பத் தருமாறு, விழா கமிட்டியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழாவை திடீரென நிறுத்தியதால் 15 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தேதி குறிப்பிடாமல் விழா மாற்றி அமைக்கப்பட்டதாக போலீசார் கூறியதால், கலைந்து சென்றனர். காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்