சபரிமலையில் பூஜை செய்த நபர்... வெளியான புதிய தகவல்

x

பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த சம்பவத்தில் மேலும் ஒரு இடைதரகரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பனின் புனித இடமாக கருதப்படும் பொன்னம்பலமேட்டில் பூஜை செய்த சம்பவத்தில் நாராயணன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே வன வளர்ச்சிக் கழக ஊழியர்கள் ராஜேந்திரன், சாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை, இடுக்கியில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் நாராயணன் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களை தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரமாக தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்