சிக்கன் கிரேவி ஆர்டர் செய்த நபர்... Combo Offer -ஆக கிரேவிக்குள் கிடந்த பல்லி - அதிர்ந்து போன நபர்

தென்காசி சங்கரன்கோவிலில் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட சிக்கன் கிரேவியில் பல்லி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என நினைத்து திறந்து பார்த்துள்ளார். உள்ளே பல்லி ஒன்று சிக்கனுடன் இலவச இணைப்பாக கிரேவிக்குள் மிதக்க, அதிர்ச்சி அடைந்த அவர், ஓட்டல் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். உரிமையாளர் மன்னிப்பு கேட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com