லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவியை சிக்க வைத்த எம்ஜிஆர் பெயர் கொண்ட நபர்

x

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பட்டை சேர்ந்த எம்.ஜி.ஆர். என்ற நெசவாளர், சேத்துப்பட்டு ஊராட்சிமன்ற பெண் தலைவர் வேண்டா என்பவர் மீது ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதில் வீட்டுவரி ரசீது போட ஊராட்சிமன்ற பெண் தலைவர் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார். பின்பு ஊழல் தடுப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை ஊராட்சிமன்ற பெண் தலைவரிடம் எம்.ஜி.ஆர். வழங்கினார். ஊராட்சிமன்ற பெண் தலைவர் பணத்தை வாங்கிய நிலையில், ஊழல் தடுப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். ஊராட்சிமன்ற பெண் தலைவர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்ட நிலையில், 11 மணி நேர விசாரணைக்கு பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்