விமான டயரில் அமர்ந்து ஆபத்தான பயணம்... 2 இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்

x

சட்டவிரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் பொகோட்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சாண்டியாகோவில் இருந்து ஏவியன்கா நிறுவன விமானம் ஒன்று வந்தது. அங்கு விமான ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது முன்பக்க சக்கரத்தில் 2 பேரின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 15 மற்றும் 20 வயது இளைஞர்கள் சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த போது பலியாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்