மலைப்பாம்பை மடக்கி பிடித்த மக்கள் - பையிலிருந்த பாம்பைக் கையில் எடுத்து போட்டோ எடுத்த வீரர்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் ஊராட்சியில், பொதுமக்கள் மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு வைத்திருந்த நிலையில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை எடுத்து, போட்டோ பிடித்து எடுத்து சென்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்த மலைப்பாம்பை, அப்பகுதி மக்கள் பிடித்து சாக்கு பையில் போட்டு வைத்திருந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர், பையில் இருந்த பாம்பை வெளியே எடுத்து, அதை கையில் பிடித்து போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் மீண்டும் அதை சாக்கு பையில் போட்டு எடுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்