"உனக்கு அவ்ளோ திமிரு ஆகிடுச்சா?"...கை, கால்களை கட்டிப்போட்டு 2 பொண்டாட்டிக்காரருக்கு பாடம் புகட்டிய மக்கள்

x

விழுப்புரம் மாவட்டத்தில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கிய நபரின் கை மற்றும் கால்களை பொது மக்கள் கயிற்றால் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரகண்டநல்லூர் அருகே டி.தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சக்திவேல் 16 ஆண்டுகளில் பல்வேறு குற்றவழக்குகளுக்காக சிறை சென்று, 3 வருடங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சாலையில் நடந்து செல்பவர்களை அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இதேபோல், சாலையில் சென்ற 3 பேரை கோவிந்தராஜ் கத்தியால் தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் போலீசாரின் உதவியுடன் கோவிந்தராஜனின் கைமற்றும் கால்களை கயிற்றால் கட்டி வைத்து மனநல காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்