40 ஆண்டுகளாக சுடுகாட்டுப்பாதை கேட்டு போராடும் மக்கள் -பொதுமக்களிடம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை

x

வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில், ஆதிதிராவிடர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக சுடுகாட்டு பாதை வசதி இல்லாததால், இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை, தங்கள் இடத்தின் மீது உள்ளதால், உடலை எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அரசு சார்பில் சுடுகாட்டு பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த நபர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையறிந்த கிராமமக்கள் 200க்கும் மேற்பட்டோர், கீழ்கொடுங்காலூர் கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்