ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்

x

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, அறிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் கிளைகளிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்