ஒடிசாவில் இடுப்பளவு வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. நள்ளிரவில் மீட்ட பரபரப்பு காட்சி..

x

ஒடிசாவில் இடுப்பளவு வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. நள்ளிரவில் மீட்ட பரபரப்பு காட்சி..


ஒடிசாவில் பெய்த கனமழையால் இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்தவர்களை படகில் சென்று மீட்பு குழுவினர் மீட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஒடிசா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 58 மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். வெள்ள அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பாலசோர் மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் மீட்கப்பட்டு வருவதாகவும், மழை வெள்ளத்திற்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்பு குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்