சிவராத்திரிக்கு முன் திடீரென கோயில் தீ பற்றி எரிந்ததால் மக்கள் அச்சம்

• ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற குடைவரை கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.. • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற, மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரை கோவில் உள்ளது. • இந்நிலையில் குடைவரை கோவிலின் அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், மலை பற்றி எரிவதுபோல் காட்சியளித்தது. • தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள் உரிய நேரத்தில் வராததால், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த சருகுகள் தீக்கு இரையாகின. • கிராம மக்களின் தீவிர முயற்சியால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு தீ பரவுவது கட்டுக்குள் வந்தது. • நாளை சிவராத்திரி விழா நடைபெறும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com