தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தாய், மகள் - போலீசார் விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர்.

திருமணமாகி மனைவி, மகள் உள்ள நிலையில் அவர்களை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், ஊராட்சியில் குடிநீர் தொட்டி இயக்கும் தினக்கூலியாக இருந்து வந்தார்.

இவர் வீட்டின் முன்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணியின் மனைவி சஞ்சீவி விறகை கொட்டி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

இந்த சூழலில் கடந்த 22ஆம் தேதி இரவு உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார் சிவசங்கர்.

மருத்துவமனையில் அனுமதித்த போது தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சிகிச்சை பலனின்றி சிவசங்கர் உயிரிழந்த சூழலில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சஞ்சீவி மற்றும் அவரின் 32 வயதான மகள் லட்சுமி பிரியா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்