சிலம்பரசனின் பத்து தல வெளியாகப்போகுது ஓடிடி-ல..

சிலம்பரசனின் பத்து தல வெளியாகப்போகுது ஓடிடி-ல..
Published on

'பத்து தல' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் 'பத்து தல'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம், கடந்த 30ம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் வருகிற 27ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com