திரையரங்குகளில் வெளியானது பதான் திரைப்படம்......படத்தின் போஸ்டர்களுக்கு தீ வைப்பு

x

பீகாரில் பதான் திரைப்படத்தின் போஸ்டர்களை, இந்து அமைப்பினர் தீ வைத்து கொளுத்தினர். ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பதான் திரைப்படத்திற்கு இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியுள்ளது. படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை இந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக இருப்பதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பீகார் மாநிலம், பகல்பூர் பகுதியில் பதான் படத்தின் போஸ்டர்களை இந்து அமைப்பினர் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள திரையரங்குகளில் படத்தை திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்