"மாறி மாறி மழையடிக்க பஸ்சுக்குள்ள குடை பிடிக்க" -சீட்டில் அமர முடியாமல் பயணிகள் அவதி

x

சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி சென்ற அரசு பேருந்தில், மழை நீர் கொட்டியதால் குடை பிடித்தபடி பொதுமக்கள் பயணித்தனர். சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி அரசுப் பேருந்து சென்ற போது, புளிஞ்சூர் அருகே கனமழை கொட்டியது. பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டியதால், இருக்கையில் அமர முடியாமல் பயணிகள் எழுந்து நின்றதுடன், ஒரு சிலர் குடை பிடித்தவாறு பயணித்தனர். சேதமடைந்த பேருந்தின் மேற்கூரையை சீரமைத்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்