தடையை மீறி கட்சிக் கொடி ஏற்றம்..தடுக்க முயன்ற அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு- கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தடையை மீறி கட்சியின் கொடியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாசுதேவனூர் கிராமத்தில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கட்சிக் கொடிக் கம்பத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டு வைத்தனர். அதற்கு வருவாய்த் துறையினர் தடை விதித்து, அகற்ற முயன்றபோது, அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசிக நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மாலையில் அந்த வழியாக வந்த திருமாவளவன், கட்சிக் கொடியை ஏற்றி விட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்