நாடாளுமன்ற கூட்டத்தொடர் - காங்கிரஸ் எடுத்த முடிவு

x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 10 சதவீத இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7 ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், சோனியா காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், விலைவாசி உயர்வு, இந்திய-சீன எல்லை விவகாரம், சுதந்திரமான அரசியலமைப்பு நிறுவனங்களில் மத்திய அரசின் தலையீடு உள்ள விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறினார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக கூறிய அவர், இதை நிறைவேற்றுவது அவசியம் என்றார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் ஏற்றாலும், 2 நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்