இன்று கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..

x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது . இதில், வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

இன்று தொடங்கி, டிசம்பர் 29-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.

மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் இந்த தொடரில், தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதை ரத்து செய்வதற்கான மசோதா முதல் நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதேபோல், கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்கும் மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க

காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்