'பரியேறும் பெருமாள்' பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்...

நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோநகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கணியான் கூத்து கலைஞராக இருந்து வந்த நிலையில், வேலை இல்லாத நாட்களில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு, பேச்சுக்கணி என்ற மனைவியும், அரசிளம் குமரி என்ற மகளும் உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com