டியூஷனுக்கு சென்ற மகளை தேடிய பெற்றோர்.. பவானி ஆற்றில் சடலமாக கிடந்த அதிர்ச்சி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாயமான பள்ளி மாணவி, பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தாசம்பாளையம் பகுதி அருகே வசித்து வருபவர் காதர். இவரது 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி டியூஷனுக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மாணவி, நேற்று மாலை பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com