6 லட்சத்தை மகன் வங்கிக் கணக்கில் போட்ட பெற்றோர்; மகன் செய்த காரியம் - கேரளாவில் அதிர்ச்சி

x

கேரளாவில் ஆன்-லைன் ரம்மி விளையாட்டில் பறிகொடுத்த ஒன்றரை லட்சம் ரூபாயை ஈடுகட்டுவதற்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாகூப் .

இவரது பெற்றோர் புதிய வீடு ஒன்று கட்டுவதற்காக பணம் சேமித்து வந்துள்ளனர்.

இதற்காக கடனாகவும் சில தொகைகள் பெற்று சுமார் 6 லட்ச ரூபாயை யாகூப்பின் வங்கிக் கணக்கில் போட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில், யாகூப் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி, அதன் மூலம் ஒன்றரை லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

இது தன் பெற்றோருக்கு தெரிந்தால் வீட்டில் பிரச்சினை ஏற்படும் என பயந்து, இழந்த பணத்தை ஈடுகட்டுவதற்காக திருட்டில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, தன் பக்கத்து வீட்டில் 3 பவுன் தங்க நகைகளை திருடியுள்ளார்.

இது குறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்க விசாரணையில் யாகூப் கைது செய்யப்பட்டார்.

மேலும், இது போல் அவர் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து யாகூப் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்