ஷாலு ஷம்முக்கு டன்சோவில் வந்த பார்சல்.. 8 வருட நண்பன் செய்த பகீர் காரியம் - குமுறும் நடிகை

x

காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட விலை உயர்ந்த ஐபோன், டன்சோ மூலம் பார்சலில் வந்ததால் அதிர்ச்சியடைந்த நடிகை ஷாலு ஷம்மு, தான் சந்தேகப்பட்ட நபரே இதை திருடியிருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தும், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலமாகவும் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. கடந்த 9ம் தேதி பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பின்னர் சூளைமேட்டில் தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். மறுநாள், தான் புதிதாக வாங்கிய 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் காணாமல் போனதை கண்டு ஷாலு ஷம்மு வருத்தமடைந்தார். தனது நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக, பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ஷாலு ஷம்மு வீட்டிற்கு, டன்சோவில் வந்த பார்சலில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஐபோன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் சந்தேகப்பட்ட நபர் தான் தனது செல்போனை திருடியிருப்பதாகவும், 8 வருட நட்பு வீணாகியுள்ளதாகவும், சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஷாலு ஷம்முவின் இந்தக் கருத்து, சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்