பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு.. 300வது நாளை எட்டிய போராட்டம் - திடீரென ஊர் மக்கள் செய்த செயல்

x

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தும் போராட்டம் இன்றுடன் 300வது நாளை எட்டியுள்ளது.பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ம் தேதி முதல் ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6 முறை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்திலும் கோரிக்கை மனுக்களை அளித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்நிலையில் போராட்டத்தின் 300வது நாளை ஒட்டி ஏரி, குளம், குட்டை, கால்வாய், உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீர் ஆதாரங்களையும் அழிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ஏகனாபுரம் வயலேரி ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 200க்கும் மேற்பட்ட போலீசாரும், தீயணைப்பு துறை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்