2 பெண்களின் தில்லாலங்கடி கைவரிசை - முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து திருட்டு

x
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், முதியவரை ஏமாற்றி 50 சவரன் தங்க நகைகளை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
  • சாந்தாராமன் என்பவரது அடகு கடையில், குமரக்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகநந்தினி என்பவர் நகையை அடகு வைத்து 70 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
  • நாக நந்தினியிடம் கடனை திருப்பி தருமாறு சாந்தாராம் கேட்டுள்ளார்.
  • பின்னர், நாகநந்தினியும், அவரது தோழி வசந்தியும், சாந்தாராம் வீட்டிற்கு சென்று, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில், இரு பெண்களையும் போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து 31 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்