பனங்கள்ளை திருடி குடித்ததால் ஆத்திரம் - கள் பானையில் ட்விஸ்ட் வைத்த விவசாயி

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பனங்கள் என நினைத்து, ஊமத்தங்காய் கரைசலை திருடி குடித்த நபர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டான்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பந்தம். இவர் பனை மரத்திலிருந்து கள் இறக்கி வந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் அதனை தொடர்ந்து குடித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி பனை மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பானையில் கள்ளோடு சேர்த்து ஊமத்தங்காயை அரைத்து ஊற்றியுள்ளார். இது தெரியாமல் வழக்கம் போல் பனங்கள்ளை திருடி குடித்த பாலசுப்ரமணியம் மற்றும் ராஜி ஆகிய இருவர், மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள் இறக்கிய சம்பந்தம் என்பவரை தேடி வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்