கவனம் பெறும் பஞ்சுருளி தெய்யம்... அப்படி என்றால் என்ன ? | Kantara | Panjuruli

x

காந்தாரா திரைப்படத்தின் மூலம் பஞ்சுருளி தெய்யம் என்ற நடனம் எனும் வார்த்தை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஒரு வித நடனக்கலைக்கு பெயரே தெய்யம். வாராகி அம்மனின் அவதார ரூபத்தில் வண்ண ஆடைகள் உடுத்தி, பச்சை பனை ஓலைகள் பின்னந்தலையில் பின்னி, உடம்பு முழுவதும் பித்தளை ஆபரணங்களால் அலங்கரித்து, மூகத்தில் சாயம் பூசி இந்த நடன நிகழ்ச்சி நடைபெறும். கன்னடா படமான காந்தாராவில் பஞ்சுருளி தெய்யம் எனும் நடனம் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது அது குறித்து இணையவாசிகள் அதிகளவில் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்