ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் | Thiruvallur

x

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியதாக, ஊராட்சி மன்றத் தலைவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஜான்சி ஜெயபிரகாஷ், கர்லம்பாக்கம் மலைப்பகுதியில் இருந்து கிராவல் மண் கடத்தி சாலை அமைத்த‌தாக புகார் எழுந்த‌து. இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் ஜெயபிராஷ்க்கு 12 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் கடித‌த்தை பெற்றுக் கொள்ள மறுத்துள்ள ஜான்சி ஜெயபிரகாஷ், மண் எடுக்க அதிகாரிகள் வழங்கிய கடிதம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்