பஞ்சதந்திரம் எனும் தெலுங்கு படத்தின் ட்ரெய்லர் வெளியீடு | samuthrakani

x

நடிகர் சமுத்திரகனி நடிக்கும் பஞ்சதந்திரம் எனும் தெலுங்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு காமெடி நடிகர் பிரமானந்தம், சுப்பிரமணியபுரம் சுவாதி, நடிகர் சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் பஞ்சதந்திரம் எனும் திரைப்படம் தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஐந்து மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்