இடி விழுந்ததில் பற்றி எரிந்த பனைமரம்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி, கோட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சுரக்குடி பகுதியில் பனை மரத்தின் மீது இடி விழுந்ததில், அந்த பனைமரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com