கவுண்டமணி நடிக்கும் 'பழனிச்சாமி வாத்தியார்' படத்தின் பூஜை

கவுண்டமணி நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார் படத்தின் பூஜை
x

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் இரண்டாவது படம் " பழனிச்சாமி வாத்தியார் "


இப்படத்தை இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்குகிறார் இப்பொழுது யோகி பாபு கஞ்ச கருப்பு உள்ளிட்ட காமெடி நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்


அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி.


சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை.


தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்..







இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி இருக்கிறது.





இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்