"பெண் வியாபாரி தாலியைப் பிடித்து இழுத்த அதிகாரி?" - ஆத்திரத்தில் தாக்க முற்பட்ட திமுக கவுன்சிலர்கள் - பழனியில் பரபரப்பு

பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் வீதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உதவியாளர் லட்சுமி சாலையோர பெண் வியாபாரி ஒருவரின் தாலிக் கயிற்றைப் பிடித்து இழுத்து, தரக் குறைவாக பேசியதாக கூறி, அதிகாரிகளுடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதத்தின் போது உதவியாளர் லட்சுமி, தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியதாக தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தாக்க முற்பட்டனர். அத்துடன் லட்சுமி சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லட்சுமியை காரில் பாதுகாப்பாக கோயில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின் தொடர்ந்து வந்த வியாபாரிகள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com