பழனி நகராட்சிக்கு ரூ.17 லட்சம் வரி பாக்கி... அதிரடி நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்

x
  • பழனி நகராட்சிக்கு 17 லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்ததால் தேவஸ்தான ஊழியர் குடியிருப்பில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
  • பழனி நகராட்சிக்கு குடிநீர் வரி, கட்டிட வரி போன்றவற்றை, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தான நிர்வாகம் செலுத்த வேண்டியுள்ளது.
  • ஊழியர்கள் குடியிருப்பு, ஆண்கள் கலைக்கல்லூரி உள்ளிட்டவைகளுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி 17 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.
  • இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டும் வரி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
  • இந்நிலையில், நகராட்சி ஆணையர் கமலா உத்தரவின் பேரில், மலையடிவாரத்தில் உள்ள கோயில் ஊழியர்கள் குடியிருப்பில் கொடுக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்பை பணியாளர்கள் துண்டித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்