பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய முயற்சி - போலீசாரும் போராட்டக்காரர்களும் மோதல் - அடிதடி... தள்ளுமுள்ளு.. புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு

x
  • இம்ரான் கான் பிரதமராகப் பதவியில் இருந்த போது வெளிநாட்டுத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பரிசுகள் பெற்று, சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக முன்வைக்கப்பட்ட புகாரில், கடந்த மாதம் 28ம் தேதி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
  • லாகூரில் உள்ள பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கானின் குடியிருப்புக்கு வெளியே அவரது ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
  • போராட்டக்காரர்களைத் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி காவல்துறையினர் கலைக்க முற்பட்டனர்.
  • இதனால் அப்பகுதியே கலவர பூமிபோல் காட்சியளித்தது.

Next Story

மேலும் செய்திகள்