"இனி பிச்சை தான் எடுக்கணும்".. பாகிஸ்தானுக்கு வந்த சோதனை - கதறும் மக்கள்

x

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் விலைவாசி உயரும் நிலையில், அரசாங்கம் ஏழைகளைதான் கொல்கிறது என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் திவால் ஆகிவிடக்கூடாது என போராடும் பாகிஸ்தான், ஐ.எம்.எப். உதவியை நாடியுள்ளது.

கடன் வழங்க ஐ.எம்.எப். விதிக்கும் கட்டுப்பாடுகளை எல்லாம் நிறைவேற்றும் விதமாக மானியங்களை ரத்து செய்து, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

இது உணவுப்பொருட்கள் தடுப்பாட்டுக்கு மத்தியில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை மேலும் மோசமாக்கும் செயல் என விமர்சிக்கப்படுகிறது.

அரசு ஏழைகளைதான் கொல்கிறது என விமர்சனம் செய்யும் பாகிஸ்தானியர்கள், இனி பிச்சைதான் எடுக்க வேண்டும் என ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே பாகிஸ்தானிடம் கையிருப்பு அந்நிய செலாவணி கரைவதால், இறக்குமதிக்கான கட்டணங்களை செலுத்த முடியாத சூழல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பிப்ரவரியில் பெட்ரோல், டீசல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்