பாக். நிதியமைச்சர் ராஜினாமா செய்ய திட்டம்

x

பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தனது பதவியை முறையாக ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது,

தற்போது மிஃப்தா இஸ்மாயிலும், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபும் லண்டனில் உள்ள நிலையில், அடுத்த வாரம் பாகிஸ்தான் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மிஃப்தா இஸ்மாயில், "தான் வாய்மொழியாக நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும்", "பாகிஸ்தான் சென்றதும் முறைப்படி ராஜினாமா கடிதம் வழங்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்