பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - 'தினத்தந்தி' குழும இயக்குனர் மரியாதை

x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்த, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன், குடும்பத்தினர் மற்றும் தினத்தந்தி குழும நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்