டெல்டா நெல்லை டெல்லிக்கு எடுத்து சென்ற மத்திய ஆய்வுக்குழுவினர் -விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

x

டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த மத்தியக்குழுவினர், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு, பருவம் தவறிய மழையால், நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகவும், எனவே ஈரப்பதத்தை 17 சதவிகிதத்தில் இருந்து 22 ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில், சென்னை உணவு தர கட்டுப்பாட்டு தொழில் நுட்ப அதிகாரி யூனூஸ் தலைமையில் மூவர் அடங்கிய மத்தியக்குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது.

தஞ்சை அருண்மொழிப்பேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்தியக்குழுவினர், விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் மணிகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்