கத்தி முனையில் உயிர்..ஓனரை கட்டி வைத்து வீட்டில் கொள்ளை - விசாரணையில் வெளிவந்த உண்மை

x

சென்னையில் ஆடிட்டர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த வழக்கில், ஆறரை லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருவபவர் ஆடிட்டர் தாணுமாலய பெருமாள். இவரது வீட்டில் கடந்த 21 ஆம் தேதி புகுந்த 4 முகமூடி கொள்ளையர்கள், தாணுமாலய பெருமாளை கட்டி வைத்து, ஏழரை லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை கத்தி முனையில் மிரட்டி பறித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, கொள்ளையில் ஈடுபட்டது தாணுமலாய பெருமாளின் முன்னாள் கார் ஓட்டுநர் உசேன் என்பது தெரியவந்தது. உசேன் மற்றும் அவரது நண்பர்களான விஜய், சோமசுந்தரம் ஆகிய மூவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள விஜயின் வங்கி கணக்கை முடக்கிய போலீசார், அதிலிருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர். தொடர்ந்து சோமசுந்தரம் வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை போலீசார் மீட்ட நிலையில், தொடர்ந்து மூவரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்