டாஸ்மாக் கடையில் வெளிநபர் மது விற்பனை..அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

சேலம் மாவட்டம் மேட்டூரில் வெளி ஆட்களை வைத்து மது விற்பனை செய்த விவகாரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேட்டூர் குருவப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநபர் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, குருவப்பாடி டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகனை பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்