தன் வினை தன்னை சுடும்.. ஓட்டேரி ரவுடிக்கு நேர்ந்த கதி - வெடித்து சிதறி படுகாயம்

சென்னை அம்பத்தூரில் வீட்டின் மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார்.

இவர் சென்னை புழல் சிறையில் இருந்த போது ரவுடி ஓட்டேரி கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில், சிறையில் இருந்து வெளியே வந்தும் நட்புடன் பழகி வந்த இவர்கள் விஜயகுமாரின் வீட்டில் வைத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் ரவுடி ஓட்டேரி கார்த்திக் படுகாயமடைந்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தங்களது பாதுகாப்பிற்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில், இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com