ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து..! நண்பனிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்த பொறியியல் மாணவன்..!

x

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், கேரளாவைச் சேர்ந்த நிகில் என்பவர் B.Tech., 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்தபோது, ஆன்லைனில் ஆர்டர் செய்து வைத்திருந்த சோடியம் சல்பேட் என்ற விஷத்தன்மை உடைய பொருளை தண்ணீரில் கலந்து நிகில் குடித்துள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து, அதே விடுதியில் உள்ள குஜராத்தை சேர்ந்த ஆதித்ய சவுத்ரி என்ற மாணவருக்கு போன் செய்து, விஷம் குடித்துள்ளதை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நண்பர்கள் இருவருடன் அறைக்கு சென்ற ஆதித்ய சவுத்ரி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிகிலை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி நிகில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்