"அதிமுக பொதுக்குழு.. தமிழக அரசும் முடிவெடுக்கும்" - ஓபிஎஸ் மகன் பேட்டி

அதிமுகவின் பொதுக்குழுவை நடத்துவது குறித்து தமிழக அரசும், முடிவெடுக்கும் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
x

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ரவீந்திரநாத், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரை சந்தித்ததாகவும் , இதை அரசியலாக்குவதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும் கூறினார். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றும், தற்போது பொதுக்குழு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசும் இது தொடர்பாக ஒரு முடிவெடுக்கும் என கூறிய அவர், நீதிமன்றத்தை நாடி சட்ட வல்லுநர்களும் முடிவெடுப்பார்கள் என எம்.பி. ரவீந்திரநாத் அப்போது தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்