திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் புகுந்து தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ அந்நிறுவனத்தின் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதாக வீடியோ வெளியான நிலையில், ஓ.பன்னீர் செல்வம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஓர் இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக காலி செய்து கொடுக்குமாறு தனியார் நிறுவனத்தை மிரட்டுவது எம்.எல்.ஏவின் பணியல்ல என்றும் இது சட்ட விரோதமான செயல் எனவும் ஓ.பி.எஸ் கண்டித்துள்ளார்...

மேலும், காவல்துறை, நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஆளும் கட்சியின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு முதல்வருக்கு அதிமுக சார்பாக கேட்டுக் கொள்வதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்